Skip to main content

Posts

வந்த பாதை - காமிக்ஸ்

பென் என்கிற நிறுவனம் குழந்தைகளுக்கு சமூகநீதி விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு நல்ல முன்னெடுப்பாக சமூகநீதி காமிக்ஸ்களை வெளியிட்டுள்ளனர். போன காமிக் கானின் போதே அரசியல் தொடர்பான மக்களின் முதல்வர் என்கிற வீடியோ கேமை வெளியிட்டிருந்தனர். அதில் கேம் விளையாடும் நாம்தான் முதல்வராக இருப்போம். நாம் எடுக்கும் முடிவுகளின் அடிப்படையில் அடுத்து நாம் முதல்வராக முடியுமா இல்லையா? என கேம் செல்லும். அதில் கேட்கப்படும் கேள்விகளே சமூக நீதி அடிப்படையில் இருப்பதை பார்க்க முடிந்தது. இந்த நிலையில் இந்த வருடம் அடுத்த முன்னெடுப்பாக தமிழில் குழந்தைகளுக்கு சமூகநீதியை பயிற்றுவிக்கும் ஒரு முன்னெடுப்பாக மூன்று காமிக்ஸ்களை வெளியிட்டுள்ளனர். வந்த பாதை காமிக்ஸை பொறுத்தவரை வயதான பெரியவர் எப்போதுமே புத்தகங்களை படித்து வருபவராக இருக்கிறார். இந்த நிலையில் சாதிய பாகுபாடு உள்ள அந்த கிராமத்தில் தொடர்ந்து பெரியவரின் தெருவை சேர்ந்த குழந்தைகள் உடல் அளவில் மனதளவிலும் தாக்கப்படுகின்றனர். அதற்கு எதிராக பெரியவர் எடுக்கும் போராட்டங்களை வைத்து கதை செல்கிறது. இந்த பெரியவர் அப்படியே பெரியாரின் சாயலாக இருக்கிறார். பெரியார் பெரிய அளவில் செய்...

ஸ்பூன் அண்ட் ஒயிட் குத்துங்க எசமான் குத்துங்க - காமிக்ஸ்

9-ம் நூற்றாண்டில் சீனாவில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்கள், வறுமை மற்றும் வேலைவாய்ப்பின்மை போன்ற காரணங்களால் பலர் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தனர். குறிப்பாக கலிபோர்னியாவில் தங்கம் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, அங்கு ஏராளமான சீனர்கள் குடியேறினர். இவர்கள் தமக்கென ஒரு சமூகத்தை உருவாக்க விரும்பினர். இதன் விளைவாக சைனா டவுன்கள் தோன்றின. இந்த டவுன்களில் சீன உணவகங்கள், கடைகள், கோவில்கள் மற்றும் சமூக கூடங்கள் அமைக்கப்பட்டன. இங்கு சீன கலாச்சாரம் மற்றும் பாரம்பரியங்கள் பேணிக்காக்கப்பட்டன. சில முக்கியமான சைனா டவுன்கள் பின்வருமாறு: சான் பிரான்சிஸ்கோ சைனா டவுன்: இது அமெரிக்காவின் மிகப் பழமையான மற்றும் பெரிய சைனா டவுன் ஆகும். நியூயார்க் நகரம் சைனா டவுன்: இது நியூயார்க் நகரில் உள்ள ஒரு பெரிய சைனா டவுன் ஆகும். சிகாகோ சைனா டவுன்: இது சிகாகோ நகரில் உள்ள ஒரு சைனா டவுன் ஆகும். ஸ்பூன் அண்ட் ஒயிட் என்பது காமிக்ஸில் வரும் இரண்டு நாயகர்களின் பெயர்கள்தான். அமெரிக்காவில் பூர்வ குடிகளாக செவ்விந்தியர்களை தவிர பாக்கி எல்லாம் வந்தேறிகள்தான். ஆனால் அதில் வெள்ளையர்கள் மட்டும் ஏனோ தங்களை பூர்வ அமெரிக்கர்களாகவும், அமெரிக்கா தங்...

அகத்தியன் விட்ட புதுக்கரடி, நல்லமுத்துவின் கதை - பாரதிதாசன்

அகத்தியன் விட்ட புதுக்கரடி, நல்லமுத்துவின் கதை - பாரதிதாசன் பக்கங்கள் 34 பாரதிதாசன் தொடர்ந்து திராவிட கொள்கைகள் மீது ஈடுபாடு கொண்டவராக இருந்தார். அதனால் அவரது எழுத்துக்களிலும் அதன் பிரதிபலிப்பு என்பது இருந்துள்ளது. அந்த வகையில் அவர் எழுதிய இரு கதைகள்தான் அகத்தியன் விட்ட புதுக்கரடி மற்றும் நல்லமுத்துவின் கதை கரடி விடுகிறான் பார் என நாம் கூறுவோம் இல்லையா.. அதனை அடிப்படையாக கொண்டுதான் அகத்தியன் விட்ட புதுக்கரடி கதை அமைந்துள்ளது. அகத்தியன் தான் தமிழுக்கு இலக்கணம் அமைத்ததாகவும் அதனை அவர் சிவப்பெருமானிடம் கொடுத்துவிட்டதாகவும் ஒரு கதை உண்டு. அதனை தொடர்ந்து அவரது சீடர் தொல்காப்பியர் தமிழுக்கு இலக்கணம் எழுதியாக ஒரு கதை உண்டு. இப்படியான கரடிகளைதான் பாரதிதாசன் விமர்சிக்கிறார். ஒன்றாக இருந்த தமிழர்கள் மத்தியில் பிராமணியத்தை பரப்ப வந்த முனிதான் அகத்தியன். அகத்தியன் வந்த பிறகு பல அறியாமைகளை அவன் மக்கள் மத்தியில் பரப்புவதாக கதை செல்கிறது.  நல்லமுத்துவின் கதையை பொறுத்தவரை அவன் அப்பா பேச்சுக்கு மறு பேச்சு இல்லை என வாழ்ந்து வருகிறான். அப்பன் பக்கத்து கிராமத்தில் வேறு பெண்ணோடு தொடர்பில் இருந்தப்போதும...

Tsunami - Race Against Time - சுனாமி அழிவில் நாம் அறியாத விஷயங்களை சொல்லும் ஆவணப்படம்

  செல்போன், இண்டர்நெட் வந்துச்சு.. இப்ப நாடே நாசமா போச்சு என கூறும் ஒரு குழுவினர் எப்போதும் இருப்பதை பார்க்க முடியும். ஆனால் தொழில்நுட்ப வளர்ச்சியால் நன்மைகள்தான் அதிகமாக இருந்துள்ளன. அப்படி ஒரு தொழில்நுட்ப வளர்ச்சி இல்லாத காரணத்தால்தான் 2004 சுனாமியில் இப்படி ஒரு அழிவு ஏற்பட்டுள்ளது. மேலும் தெருவிளக்குகள் வந்த பிறகுதான் கிராமங்களில் கள்ள தொடர்புகள் குறைந்ததாக கி.ரா கோபல்ல கிராமம் கதையில் கூறுகிறார். அதுக்கூட தொழில்நுட்பத்தின் ஒரு நன்மைதானே. இப்போது சுனாமிக்கு வருவோம் Tsunami - Race Against Time என்கிற ஆவணப்படம் ஹாட்ஸ்டாரில் கிடைக்கிறது. சுனாமியை வெறும் இயற்கை பேரிடராக மட்டுமே அணுகிய என்னை போன்றவர்களுக்கு சுனாமி குறித்து கேட்காத பல விஷயங்களை இந்த ஆவணப்படம் கூறுகிறது. சுனாமியின்போது பாதிக்கப்பட்ட பகுதிகளில் எடுக்கப்பட்ட நிஜ வீடியோக்களை கொண்டே ஒட்டு மொத்த ஆவணப்படமும் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்திய பெருங்கடல் பெரிதாக சுனாமி ஏற்படாத ஒரு பகுதியாக இருந்து வந்தது. அதனால் சுனாமி எச்சரிக்கை மையங்கள் எதுவுமே இந்திய பெருங்கடல் பகுதியை சேர்ந்த நாடுகளுக்கு அப்போது கிடையாது. இந்த நிலையில்தான் 2...

டெட் வுட் டிக் அதிரடி - உதிரத்தின் நிறம் கறுப்பல்ல.!

  1877 இல் வெளிவந்து அதிக பிரபலமடைந்த டெட் வுட் டிக் நாவலை மையப்படுத்தி எழுதப்பட்டது இந்த காமிக்ஸ் டெட் வுட் டிக் ஒரு கறுப்பினத்தை சேர்ந்த கதாநாயகன் ஆவார். அமெரிக்க ராணுவத்தில் இருக்கும் இவர் அவர்களுக்காக ஒரு செவ்விந்தியனை கொலை செய்ய செல்கிறார்கள்.  அந்த சமயத்தில் துவண்டு கிடக்கும் அந்த செவ்விந்தியன் டெட் வுட் டிக்கை பார்த்து உன்னை பார்த்து ஆச்சரியமாக இருக்கிறது என்கிறான். ஏன் என டெட் வுட் டிக் கேட்க ஒரு நாயை விட உங்களை இழிவாக நடத்தும் இவர்களுக்காக நீ வேலை பார்க்கிறாயே அதுதான் ஆச்சரியமாக இருக்கிறது என்கிறான் அந்த செவ்விந்தியன். அந்த ஒரு வார்த்தை டெட் வுட் டிக்கை பெரிதாக பாதிக்கிறது. அதனை தொடர்ந்து அவன் ராணுவத்தை விட்டு விலகுகிறான். இந்த நிலையில் சாக கிடக்கும் ஒரு முதியவனை பார்க்கிறான் டெட் வுட் டிக். அந்த முதியவர் உயிருடன் இருக்கும்போது பேசும் ஒரு சில விஷயங்களே டெட் வுட் டிக்குக்கும் அந்த முதியவருக்கும் ஆழமான நட்பை உருவாக்குகிறது. இந்த நிலையில் நான் இறந்துவிட்டால் என்னை ஒரு நல்ல கல்லறையில் புதைக்க வேண்டும் என தனது கடைசி ஆசையை தெரிவிக்கிறார். அதற்கு டெட் வுட் டிக்கும் ஒப்புக்கொ...

உதிரிப்பூக்கள் விமர்சனம்

  உதிரிப்பூக்கள் இயக்குனர்: மகேந்திரன் மகேந்திரனின் ஒரு சில திரைப்படங்களைதான் நான் பார்த்துள்ளேன். கை கொடுக்கும் கை பார்த்தப்போதே ஒரு வியப்பு இருந்தது. தற்சமயம் பார்த்த உதிரிப்பூக்கள் 1979 இல் கண்டிப்பாக ஒரு சிறப்பான திரைப்படம். கதாநாயகனே இல்லாத ஒரு கதை. சுந்தர வடிவேலு என்னும் பண்ணையார். ஒரு சைக்கோத்தனமான மனநிலையை கொண்டவன். அவனை சுற்றிதான் கதை நகர்கிறது நாம் பலரது வீட்டில் அதிக ஆதிக்க தன்மையுடன் இருக்கும் சில ஆண்களை பார்த்திருப்போம். இது என்ன சாதாரண விஷயம்தானே.. ஆண்கள் ஊரில் இப்படி இருப்பதில்லையா என்பதுதான் பொது மனநிலையாக இருக்கும். ஆனால் அப்படி இருப்பவர்கள் செய்யும் தவறுகள் எவ்வளவு பெரியது என்பதைதான் படத்தின் வழியே பார்க்க முடிகிறது. தனது மனைவியின் தங்கையை திருமணம் செய்ய ஆசைப்படுகிறான் சுந்தரவடிவேலு. அதற்காக அவன் செய்யும் மோசமான காரியங்களை மையமாக கொண்டு கதை நகர்கிறது. படம் துவங்கி சில நிமிடங்களிலேயே கதாபாத்திர அறிமுகங்கள் சுந்தர வடிவேலு தன் மனைவியின் தங்க சென்பகத்தின் மீது ஆசைப்படுவது எல்லாம் வந்துவிடுகிறது. மீதம் 2 மணி நேரமும் அவளை அடைய சுந்தரம் செய்யும் விஷயங்களை 1979 காலக்கட்டத...

கௌரவன் 2 - நயவஞ்சகமாக வீழ்த்தப்பட்ட துரியோதனின் காவியம் - புத்தக விமர்சனம்

கௌரவன் 2 - நயவஞ்சகமாக வீழ்த்தப்பட்ட துரியோதனின் காவியம் ஆசிரியர்: ஆனந்த் நீலக்கண்டன் தமிழில்: நாகலெட்சுமி சண்முகம் பதிப்பகம்: மஞ்சுள் பக்கங்கள்: 600 எழுத்தாளர் ஆனந்த் நீலக்கண்டன் தொடர்ந்து புராணங்களில் தோற்கடிக்கப்பட்டவர்களின் பக்கமிருந்து அவர்களது நியாயத்தை பேசும் வகையில் கதைகளை எழுதி வருகிறார். அப்படியாக அவர் ஏற்கனவே எழுதிய அசுரன் என்கிற ராவணனின் கதையை படித்துள்ளேன். அதுவே மிக சிறப்பாக இருந்தது. அதனை தொடர்ந்து அவர் இரண்டு பாகங்களாக எழுதிய புராணக்கதைதான் இந்த கௌரவன். புராணங்கள் என்பவை உருவாக்கப்பட்ட கதைகள் என்பதால் அவற்றில் பல வெர்ஷன்கள் இருக்கும். ராமாயணத்தை எடுத்துக்கொண்டால் பல வகையான ராமாயணம் உண்டு. பழங்குடி இன மக்களுக்கு கூட ஒரு தனிப்பட்ட ராமாயணம் கதை உண்டு என கேள்விப்பட்டுள்ளேன். அதே போலதான் மகாபாரதமும். மகாபாரதத்திற்கு பல வகையான கதைகள் இருந்தாலும் கூட பெரும்பான்மையான கதைகளில் கதை நாயகர்களாக பாண்டவர்களே இருந்து வருகின்றனர். அதற்கு பதிலாக கௌரவர்களை கதை நாயகர்களாக வைத்து எழுதப்பட்ட கதைதான் கௌரவன். இது ஆனந்த் நீலகண்டனின் வெர்ஷன் என கூறலாம். மகாபாராத கதை துரியோதனின் பார்வையில் இருந்த...