Skip to main content

Posts

தாத்தா சொன்ன கதைகள் - கி.ராஜநாராயணன்

  தாத்தா சொன்ன கதைகள் கி.ராஜநாராயணன் பக்கங்கள்: 260 இலக்கிய வட்டாரத்தில் நாவல் கதைகள் படிப்பதெல்லாம் பிரயோஜனமற்ற விஷயம் என நினைக்கும் நபர்களை நான் பார்த்திருக்கிறேன். ஆனால் இவர்கள் படிக்கும் வரலாறுகளுக்கு முன்பே கதைகள் உருவாகிவிட்டன. மனித நாகரிகத்தில் எழுதக்கூடிய சான்றோர்கள் பெரிதாக இல்லாத சமயங்களிலேயே வரலாறுகள் கதைகளின் வழியாகதான் பரவி வந்தன. வழிப்போக்கர்கள், வணிகர்கள் சொன்ன கதைகள்தான் மக்கள் தாங்கள் பார்க்காத உலகை கதைகளின் வழியே பார்க்க உதவின என கூறலாம். கதைகள் அதிக முக்கியமானவை. இந்தியா மீது அலெக்சாண்டர், முகலாயர்கள், போர்ச்சுக்கீசியர்கள், ஆங்கிலேயர்கள் என பலரும் படையெடுக்க காரணமாக இருந்தவை கதைகளே. இந்தியா குறித்த செவி வழி கதைகளே அதை பற்றிய பிரமாண்டமான தோற்றத்தை உண்டாக்கியது. இந்த மாதிரியான கதைகளில் ஆசிரியர் என்று யாரும் கிடையாது. கதையை சொல்லக்கூடிய ஒவ்வொரு நபரும் சுவாரஸ்யத்திற்காக எதையாவது கூட்டியோ குறைத்தோ கதையை மாற்றி அமைத்து சொல்ல முடியும். அவை முழுக்க உண்மை என கூற முடியாது. ஆனால் கதைகள் சமக்கால வரலாறுகளை தன்னுள் சுமந்து கொண்டுள்ளது. எனவேதான் நாட்டுப்புற கதைகளுக்கு எப்போதுமே...

காதுகள் Book Review

  காதுகள் எம்.வி வெங்கட்ராம் 160 பக்கங்கள் நம்முடைய ஒட்டு மொத்த வாழ்க்கையும் புலன்களின் மீது கொண்டுள்ள நம்பகத்தன்மையை அடிப்படையாக கொண்டுதான் சென்று கொண்டுள்ளன. ஒருவேளை மற்றவர்களுக்கு பச்சை நிறத்தில் தெரியும் விஷயங்கள் நமக்கு நீல நிறமாகவும், நீல நிறமானது பச்சை நிறமாகவும் தெரிந்தால் இறுதி வரை நாம் பச்சை நிறத்தை நீல நிறமென்றே நம்பி கொண்டுதான் வாழ்ந்து கொண்டிருப்போம். எத்தனை பேர் அப்படி வாழ்ந்து கொண்டுள்ளோம் என்பதும் தெரியவில்லை. 😁. இந்த நிலையில் வாழ்க்கையில் எவ்வளவோ விஷயங்களை தொடர்ந்து நாம் பிரச்சனையாக பார்த்து வருகிறோம். ஆனால் உடல் உறுப்புகளே செய்யும் பிரச்சனைகளை அடிப்படையாக கொண்டு உருவான ஒரு கதைதான் காதுகள். அறிவியல் மற்றும் மாந்தீரிகம் என இரு வகையிலுமே கதையின் போக்கு அமைந்துள்ளது. நல்ல ஒரு குடும்பத்தில் நல்ல நிலையில் இருக்கும் கதாநாயகனுக்கு திடீரென ஒரு நாள் காதுகளில் தாமாகவே யாரோ உரையாடி கொண்டிருப்பது போல தோன்றுகிறது. அதனை தொடர்ந்து அந்த பிரச்சனை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க அவரால் எதிலுமே நாட்டம் காட்ட முடியாமல் போகிறது. குடும்பமே பெரும் வறுமைக்குள் செல்கிறது. யாருமே பார்க்க முடியா...

குருதியில் பூத்த குறிஞ்சி மலர் Comics Review

  குருதியில் பூத்த குறிஞ்சி மலர். காமிக்ஸ் பக்கங்கள்: 66 எல்லா காலங்களிலும் நாகரிகத்தை வளர்க்கிறேன் என்கிற பெயரில் நாகரிக குடிகள் என்று தங்களை பறைசாற்றி கொள்ளும் விவசாய குடிகள் பல பழங்குடிகளை அழித்துதான் தங்கள் நாகரிகத்தை வளர்த்துள்ளது. இந்திய மலைவாழ் மக்கள், சீனத்தில் மங்கோலியர்கள் அமெரிக்காவில் செவ்விந்தியர்கள் என இந்த லிஸ்ட் மொத்த உலகத்தையும் ஒரு சுத்து சுத்தி வரும். ஆனால் இதற்கெல்லாம் ஆதி இந்த இன வெறி மட்டுமே. அமெரிக்கர்களும் சரி அவர்களுக்கு முன்பு அமெரிக்காவை ஆக்கிரமிப்பில் வைத்திருந்த பிரிட்டிஷாரும் சரி. வெகு காலங்களாகவே செவ்விந்தியர்களை மிக மோசமாகவே நடத்தி வந்திருக்கின்றனர். ஆரம்பத்தில் இருந்தே செவ்விந்தியர்கள் வெள்ளையர்களுக்கு அடங்கி போகவில்லை. மேலும் செவ்விந்தியர்கள் காட்டு மக்களாக இருப்பதாலும், இங்கிலாந்து காரர்களுக்கு உலகிலேயே தான் மட்டுமே தூய்மையான இனம் என்கிற பம்மாத்தும் இருக்கிறதால் அவர்கள் செவ்விந்திய கிராமங்களை எரிப்பது செவ்விந்திய பெண்களை நாசம் செய்வது போன்றவற்றை பொழுது போக்காகவே செய்து வந்தனர். உலகிலேயே அதிகப்படியான காட்டுமிராண்டி தனங்களை செய்தப்போதும் இன்னமும் தா...

ஏ.ஐ எனும் ஏழாம் அறிவு - Book Review

  ஏ.ஐ எனும் ஏழாம் அறிவு ஹரிஹரசுதன் தங்கவேலு பக்கங்கள்: 191 கடந்த சில ஆண்டுகளில் மட்டும் ஏ.ஐயின் வளர்ச்சி என்பது மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக மாறியுள்ளது. மனிதர்கள் சில மணி நேரங்களில் செய்யும் அறிவு சார்ந்த நிறைய வேலைகளை ஏ.ஐ சில நிமிடங்களில் செய்ய துவங்கியது முதலே ஏ.ஐ மீது மனிதர்களுக்கு இருக்கும் ஈடுபாடு என்பது அதிகரிக்க துவங்கியது. நிறைய டெவலப்பர்களே கூட ஏ.ஐ மனிதர்களின் ப்ரோகிராம் என்பதை மறந்து மனிதனுக்கு போட்டியாகவும் ஏதோ உயிருள்ள ஜீவராசி போலவும் அதை நினைக்க துவங்கியுள்ளனர். எவ்வளவிற்கு ஏ.ஐ யில் நன்மைகள் இருக்கிறதோ அதே அளவில் தீமைகளும் உண்டு. எல்லா விஷயத்திலுமே உலகில் நன்மை என இருந்தால் தீமையும் இருக்கும். தீமையிலும் சில நன்மைகள் இருக்கும். அந்த வகையில் ஏ.ஐ வளர்ச்சியில் டீப் ஃபேக் மாதிரியான பல விஷயங்கள் மக்களுக்கு என்னவென்று கூட விளங்குவதில்லை. மேலும் அது பெரும் அச்சுறுத்தலாகவும் இருக்கிறது. இப்படியான நிலையில் ஏ.ஐ குறித்து அவர்களுக்கு குறைந்த பட்ச அறிவையாவது கொடுப்பதன் மூலம் அவர்களை இந்த மாதிரியான மோசமான விளைவுகளில் இருந்து காப்பாற்ற உதவும். தமிழில் தொழில்நுட்பம் சார்ந்தே குற...

கொடூர கொலை வழக்குகள் Book Review

  கொடூர கொலை வழக்குகள் வைதேகி பாலாஜி 144 பக்கங்கள் மர.ண தண்டனை என்பது பல நாடுகளில் எப்போதுமே சர்ச்சையை ஏற்படுத்தும் ஒரு விஷயமாகதான் இருக்கிறது. அரசாங்கமாகவே இருந்தாலும் கூட ஒரு உயிரை பறிப்பதற்கான உரிமை யாருக்குமே கிடையாது என்பது பொதுவான கருத்தாக இருந்து வருகிறது. இந்த கருத்துக்கு பல நாடுகள் உட்பட்டுள்ளன. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் என 155க்கும் அதிகமான நாடுகள் தற்சமயம் மர.ண தண்டனையை நீக்கியிருக்கின்றன. சில நாடுகள் வெளிப்படையாக அமலில் வைத்துள்ளன. ஆனால் சில நாடுகள் அரிதாக மட்டுமே மரண தண்டனையை பயன்படுத்துகின்றன. இந்த குற்றவாளிக்கு அரசாங்கத்தாலேயே மன்னிப்பு வழங்க முடியாது என நினைக்கும் அளவிற்கு கொடூரமான குற்றங்களை செய்த குற்றவாளிகளுக்கு மட்டும் அரிதாக மரண தண்டனை வழங்கப்படுகின்றன. தமிழ்நாட்டில் இறுதியாக ஆட்டோசங்கர் எனப்படும் கௌரி சங்கருக்கு 1995 ஆம் ஆண்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. அதற்கு பிறகு இப்போது வரை அப்படியான தண்டனை யாருக்கும் வழங்கப்படவில்லை. இந்த புத்தகத்தை பொறுத்தவரை இந்தியாவில் கொடூரமான குற்றங்களை செய்து மரண தண்டனை பெற்ற முக்கிய குற்றவாளிகளை பற்றிய தகவல்களை வழங்குகிறது இந்...

பணம் சார் உளவியல் - Psychology of Money Book Intro

பணம் சார் உளவியல் - Psychology of Money மார்கன் ஹௌஸ்ஸேல் பக்கங்கள்:266 பணம், சேமிப்பு, சுய தொழில் துவங்குவது என பலவற்றை குறித்தும் ஞானத்தை வழங்கும் புத்தகமாக பணம்சார் உளவியல் புத்தகம் இருக்கிறது. மிக முக்கியமாக சேமிப்பு பழக்கம் மற்றும் சேமிப்பை பெருக்குவதற்கு எதிலெல்லாம் நாம் பணத்தை முதலீடு செய்யலாம் என்பதை பற்றி விரிவாக பேசப்பட்டுள்ளது. அதில் ஆகா என வியக்கும் அளவில் சில விஷயங்கள் இருந்தன. அவற்றை மட்டும் இங்கு விளக்கலாம் என நினைக்கிறேன். நாம் எந்த காலத்தில் பிறக்கிறோம் என்பதை பொருத்து நாம் முதலீடு செய்வதும் சேமிப்பதும் மாறுபடும் என்பது ஆசிரியரின் கருத்தாக இருக்கிறது. அது ஒரு வகையில் உண்மையும் கூட. அமெரிக்காவில் பங்கு சந்தை வீழ்ச்சி அடைந்த காலக்கட்டத்தில் வளர்ந்த ஒருவன், பங்கு சந்தை வீழ்ச்சி முடிந்த பிறகு பிறந்தவனை விட குறைந்த அளவிலேயே பங்குசந்தை முதலீடு குறித்து யோசிப்பானாம்.  ஏனெனில் அவன் வாழ்ந்த காலத்தில் அவன் பங்கு சந்தை முதலீட்டின் ஆபத்து குறித்து அறிந்தவன். ஆனால் பிறகு பிறந்தவன். அந்த ஆபத்தை அனுபவிக்காதவனாக இருக்கிறான். உதாரணத்திற்கு வங்க பஞ்சம் நிகழ்ந்த காலத்தில் பிறந்த ஒரு ந...

இந்தியா அடிமைப்படுத்தப்பட்ட வரலாறு… ஐரோப்பிய ஆக்கிரமிப்புகள் (1498-1765)

  இந்தியா அடிமைப்படுத்தப்பட்ட வரலாறு… ஐரோப்பிய ஆக்கிரமிப்புகள் (1498-1765) ஆசிரியர்:ராய் மாக்ஸம் கிழக்கு பதிப்பகம் பக்கங்கள்: 278 இந்தியா குறித்து சில முக்கியமான புத்தகங்களை எழுதியவர்தான் எழுத்தாளர் ராய் மாக்ஸம். இவரின் ஆய்வுகள் பலவும் இந்திய வரலாறு குறித்து முக்கியமான விஷயங்களை பேசுகின்றன. ஏற்கனவே இவர் எழுதி தமிழில் வெளியான உப்புவேலி மற்றும் தே ஒரு இலையின் வரலாறு ஆகிய புத்தகங்களை படித்துள்ளேன். அந்த வகையில் இது மூன்றாவது புத்தகம். ஆங்கிலத்தில் The Theft of India: The European Conquests of India 1498–1765 என்று வெளியான புத்தகத்தின் தமிழ் மொழிபெயர்ப்புதான் இந்த புத்தகம். பெரும்பாலும் பள்ளி காலத்தில் இந்திய விடுதலை குறித்து படிக்கும்போது ஏதோ பிரிட்டிஷார்தான் நம்மை அடிமைப்படுத்தியதாகவும் அதற்கு முன்பு இந்தியர்கள் எல்லையை கூட யாரும் தொட்டதில்லை என்பது போலவும் நினைத்து கொண்டிருந்திருப்போம். ஆனால் அதற்கு முன்பே இந்தியாவை கொள்ளையடித்து போன பல கூட்டங்களை இந்த புத்தகம் விவரிக்கிறது. 1498 இல் முதன் முதலாக வாஸ்கோடாகாமா என்கிற வெள்ளையன் கேரளாவில் உள்ள கோழிகோட்டில் காலடி எடுத்து வைப்பதில் இருந்...