Skip to main content

Posts

புதிய வரலாறு - அறிஞர் அண்ணா

  பல வருட போராட்டங்களுக்கு பிறகு அறிஞர் அண்ணா தமிழ்நாட்டில் ஆட்சி அமைத்தப்போது காங்கிரஸ் தோல்வியை கண்டது. அதற்கு முன்பு நடந்த இந்தி திணிப்பு காரணமாக தமிழக மக்கள் காங்கிரஸ் மீது அதிக வெறுப்பில் இருந்தனர். அதனாலேயே முக்கியமாக திமுக வென்றது. இப்போது விஜய்யை எப்படி திமுக விமர்சனம் செய்து வருகிறதோ அதே மாதிரியான விமர்சனங்களை அப்போது காங்கிரஸ் திமுக மீது அள்ளி விட்டுள்ளது. அண்ணா ஆட்சி அமைத்த பிறகு அதற்கு பதிலளித்து எழுதிய புத்தகம்தான் இந்த புதிய வரலாறு. ஏதோ இளைஞர்கள் எல்லாம் கூடி ஆட்சி அமைத்துவிட்டனர். இந்த ஆட்சி நிலைக்காது, எல்லாம் கத்துக்குட்டிகள் என்பதுதான் அப்போது காங்கிரஸின் நிலைப்பாடாக இருந்தது. ஆனால் அப்போதைய திமுகவை எந்த விதத்திலும் த.வெ.கவுடன் ஒப்பிட முடியாது. திமுக இளைஞர்களில் பலபேர் அப்போது இந்தியை எதிர்த்த தேசிய மாணவர் படையில் உறுப்பினராக இருந்தவர்கள். துரைமுருகன், வைகோ போன்ற பலரும் அப்போது மாணவர் படையில் இருந்து போராடியவர்கள். தமிழக அரசியல் தெரிந்தே அரசியலுக்குள் வந்தனர். அவர்களை அரசியல்ப்படுத்தப்படாத இந்த கூட்டத்தோடு ஒப்பிட முடியாது. ஆனால் சூழ்நிலை இப்போது போலவே இருந்த...

புளிக்க வைத்த அப்பம் - Book Review

  வன்முறை யார் மீது நடத்தப்பட்டாலும் அது தவறான விஷயம்தான். இரண்டாம் உலகப்போர் நடந்த காலக்கட்டத்தில் பல நாடுகளில் கிறுக்கு ராஜாக்களும், அதிபர்களும்தான் ஆட்சியில் இருந்தனர். இதுவே இரண்டாம் உலகப்போரை சாத்தியப்படுத்தியது எனலாம். அமெரிக்கா, ஜப்பான், ரஷ்யா என்கிற இந்த வரிசையில் ஜெர்மனியை சேர்ந்த ஹிட்லர்தான் நம்பர் 1. தன் தேசத்தில் யூதர்களை அழித்தொழிக்கும் வேலையை ஹிட்லர் பார்த்தப்போது அங்கு யூதர்கள் பட்ட கஷ்டங்களை ஒரு யூத பெண்ணின் பார்வையில் இருந்து கதை விளக்குகிறது. அவளுக்கு எப்போதுமே சமைப்பது என்றால் மிகவும் பிடிக்கும். உலகம் முழுக்க உள்ள எல்லா உணவுகளையும் சமைக்க அவளுக்கு ஆசை. ஏனெனில் யூதர்கள் கொல்லப்பட துவங்கியவுடன் பலரும் காடு மாதிரியான பகுதிகளுக்கு சென்று பதுங்கிவிட்டனர். அவர்கள் சாப்பாடே இல்லாமல் இரவு வரை காடுகளில் பதுங்கி இருப்பார்கள். இரவு நேரங்களில் நகர்ப்புர குப்பைத்தொட்டிகளை கிளறி அதில் கிடைப்பவற்றை உண்டு வந்தனர். இவளும் இப்படிதான் வாழ்ந்து வருகிறாள். இவளது பெற்றோர்களும் தம்பியும் ராணுவத்திரிடம் மாட்டி யூத வதை முகாமுக்கு செல்கின்றனர். அங்கு வரும் யூதர்கள் உடையில் உள்ள ப...

திராவிட தேசீயம்! மாநில சுயாட்சி ஏன்? Book Review

  மத்திய சர்க்காருக்கு அந்த சமயத்தில் அறிஞர் அண்ணா செய்த இரண்டு மிகப்பெரிய ஓ.ஜி சம்பவங்கள்தான் திராவிட தேசீயம் மற்றும் மாநில சுயாட்சி. இப்போது வெறுமனே திராவிட கட்சிகளை திட்டி கொண்டிருக்கும் இளம் தலைமுறையினருக்கு இந்த விஷயங்கள் குறித்து தெரிந்திருக்க வாய்ப்பில்லை. திராவிட தேசீயம் இந்தி எதிர்ப்பு போராட்டத்துக்கு பிறகுதான் தமிழ்நாட்டில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. அதே சமயம் திராவிட முற்போக்கு கழகம் முதன் முதலாக ஆட்சி அமைத்தது. அப்போது இருந்தே அண்ணாவுக்கு இருந்த மிகப்பெரிய நெருடல் மத்திய சர்க்கார் நினைத்தால் எதை வேண்டுமானாலும் மாநில அரசில் நிறைவேற்ற முடிகிறது. எனவே நமக்கான உரிமைகள் நம்மிடம் இருக்க வேண்டும் என நினைத்துள்ளார். அந்த வகையில் அவருக்கு வந்த எண்ணம்தான் திராவிட தேசீயம். தமிழ்நாடு, கேரளம், ஆந்திரா, கர்நாடகா (அப்போது தெலுங்கானா இருக்கவில்லை) ஆகிய நான்கு மாநிலங்களை ஒன்றிணைத்து தனி திராவிட நாடு ஒன்றை உருவாக்க நினைத்தார் அண்ணா. இந்தியாவில் இருந்து பிரியும் இந்த நாடு தனிப்பட்டு செயல்படும் என்பது அவரது எண்ணம். திராவிட தேசீயம் என்று ஒரு விஷயம் கிடையாது. திராவிடம் என்பதே அண்ணா உருவாக...

சாம்பலின் சங்கீதம் - Graphic Novel

  சாம்பலின் சங்கீதம் கிராபிக் நாவல் மொத்த மனிதக்குலத்துக்கும் அச்சுறுத்தலாக இருந்த கண்டுப்பிடிப்புகளில் மிக முக்கியமான ஒன்று அணுகுண்டு. இரண்டாம் உலகப்போரில் மிகப்பெரிய அழிவு ஏற்பட்டதற்கும் திரும்ப உலகப்போரே உருவாகாமல் இருப்பதற்கும் காரணமாக அமைந்த ஒரு கண்டுப்பிடிப்பு. அணுக்கரு குறித்த சோதனை என்பது பல நூற்றாண்டுகளாகவே நடந்துக்கொண்டுதான் இருக்கிறது. எப்போதும் அறிவியலில் தியரியாக கூறப்படும் தத்துவங்களை வெளியில் இருந்து கேட்பவர்களுக்கு நகைச்சுவையாகவே இருக்கும். இதுல எப்படினே லைட் எறியும் என்பதாகதான் அவர்களுக்கு இருக்கும். ஆனால் ராஜ ராஜ சோழனிடம் சென்று இண்டர்நெட் என்று ஒன்று எதிர்காலத்தில் வரும் அதில் உலகில் உள்ள எல்லா தரவுகளும் கிடைக்கும். ஆனாலும் பெரும்பாலானோர் கேலிக்கைக்கு மட்டுமே அதை பயன்படுத்துவர் என கூறினால் அவர் நமக்கு மண்ட கோளாறு என்றே நினைப்பார். அணுவை பிளப்பதன் மூலம் பெரும் ஆற்றல் வெளிப்படும் என்பதும் ஆரம்பத்தில் அப்படியான விஷயமாகதான் பார்க்கப்பட்டது. இந்த புத்தகம் அணுகுண்டு குறித்த யோசனை உருவானதில் துவங்கி ஹிரோஷிமாவில் அமெரிக்கா குண்டு போட்டவரை அரசியல் ரீதியாகவும், அ...

அண்ணல் நபி குறித்து அறிஞர் அண்ணா

  அண்ணல் நபி குறித்து அறிஞர் அண்ணா தொகுத்தவர்: ஜே.எம் சாலி எம்.ஏ பொதுவாக இஸ்லாம் குறித்த கண்ணோட்டம் என்பது பொது புத்தியில் மாறியிருக்கிறது. இதற்கு காரணம் என்னவென்றால் திரைப்படங்களில் துவங்கி பொதுவாகவே இஸ்லாமியர் என்றால் மோசமானவர் என்கிற பிம்பமே. அதற்கு தகுந்தாற் போல இஸ்லாத்தை வைத்து கடுமையான சட்டங்களை போடும் பிற்போக்குதனமான சட்டங்கள் இட்டுள்ள நாடுகளையும் நாம் பார்க்கிறோம். ஆனால் உண்மையில் அந்த மதம் அவர்களுக்கு எதை போதிக்கிறது எனும்போது இஸ்லாத்து அன்பைதான் போதிக்கிறது. அதை சிலர் சரியாக பின்பற்றுவதில்லை என்பதாக சில இஸ்லாமிய நண்பர்களே கூற கேட்டுள்ளேன். நபிகள் இஸ்லாத்தில் என்ன போதிக்கிறார் என்பதை விளக்கும் வகையில் அண்ணா பேசியுள்ள உரைகளின் தொகுப்புதான் இந்த புத்தகம். அறிஞர் அண்ணா ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்கிற கோட்பாடை நபிகளிடம் இருந்துதான் எடுக்கிறார். அல்லாஹ் ஒருவனே தேவன் என்கிற நபியின் கோட்பாடு ஒரு புரட்சி என்கிறார் அண்ணா. அதாவது 1400 ஆண்டுகளுக்கு முன்பு அரபு தேசத்தில் அல்லாஹ் முக்கிய தெய்வமாக இருந்தாலும் கூட பல்வேறு உருவங்களை கடவுள்களாக வணங்கியுள்ளனர். கிட்டத்தட்ட 300க்கு...

மாயி-சான்- ஹிரோசிமாவின் வானம்பாடி

  மாயி-சான்- ஹிரோசிமாவின் வானம்பாடி உலகில் மனிதர்களால் நடத்தப்பட்ட பேரழிவுகளில் காலத்தால் மறக்கப்படாத அமெரிக்காவை என்றென்றும் மனித நேயமற்ற நாடு என அழைக்கவும் காரணமாக இருந்த நிகழ்வு ஹிரோஷிமாவில் அமெரிக்கா நடத்திய அணுகுண்டு தாக்குதல். அதுவும் பயன்படுத்துவதற்கு எந்த ஒரு தேவையும் இல்லாதபோது தனது ஆயுத சக்தியை உலகிற்கு காட்டி அச்சத்தை உண்டாக்க மட்டுமே அமெரிக்கா செய்த ஒரு செயல்தான் இந்த அணுகுண்டு தாக்குதல். அணுகுண்டு தாக்குதல் நடந்த சமயத்தில் இருந்து ஹிரோஷிமாவில் என்ன மாதிரியான நரக வேதனைகள் நடந்தன. தப்பி பிழைத்தவர்கள் எதை பார்த்தார்கள், எங்கு சென்றனர். என்ன நடந்தது என்பதை விளக்குகிறது இந்த புத்தகம். புத்தகத்தில் விளக்கும் மாயி சான் வெளியே நின்று வேடிக்கை பார்த்தவர் அல்ல. அந்த ஹிரோஷிமா விபத்தில் பாதிகப்பட்டவர். காலை உணவை உண்ண அமர்ந்த மாயி சான் திடீரென பெரு வெடிப்பு சத்ததை கேட்கிறார். அதனை தொடர்ந்து அவர் பார்வையில் என்னவெல்லாம் அவர் பார்க்கிறார் என்பதை புத்தகம் விளக்குகிறது. எப்போதும் இந்த அணுகுண்டு தாக்குதல் பற்றிய புத்தகங்களில் அமெரிக்கா தொழில்நுட்ப ரீதியாக செய்த விஷயங்கள் அதிகமாக...

உணவு சரித்திரம்

  உணவு சரித்திரம் ஆசிரியர்: முகில் வரலாற்று நிகழ்வுகளை சுறுசுறுப்பாக படிப்பதற்கு எளிமையாக எழுதக்கூடிய ஒரு சில தமிழ் எழுத்தாளர்களில் முக்கியமானவர் எழுத்தாளர் முகில். வெளிச்சத்தின் நிறம் கறுப்பு மூலமாக முகில் புத்தகம் மீது ஆர்வம் உண்டானது. அடுத்து இப்போது படித்த புத்தகம் உணவு சரித்திரம் தக்காளி, வெங்காயம் மிளகாயில் துவங்கி இன்னும் எத்தனையோ உணவு பொருட்கள் காலம் காலமாக நம் பூமியில் விளைகின்றன என்றுதான் நானும் கூட பல காலங்களாக நினைத்து வந்தேன். ஆனால் உண்மையில் அப்படியல்ல என்பது சில மாதங்களுக்கு முன்பு ராய் மார்க்ஸம் எழுதிய அடிமைப்படுத்தப்பட்ட இந்தியா புத்தகத்தை படித்தப்போது தெரிந்தது. அதில் கொஞ்சமாக இது பற்றிய விஷயங்கள் இருந்தன. தற்சமயம் முகில் புத்தகம் முழுக்க முழுக்கவே உணவுகளின் வரலாற்றை கொண்டதாக உள்ளது, உண்மையில் பக்கத்துக்கு பக்கம் வியப்புகளை அளிக்க கூடிய ஒரு புத்தகம் என்றுதான் கூற வேண்டும். எப்போதும் விடை தெரியாத சின்ன சின்ன சந்தேகங்களுக்கு நாமே ஒரு விடையை உருவாக்கி கொள்வோம். அப்படியாக இவ்வளவு நாளாக ஏதோ மரத்தில் வழியும் பிசின் தான் பெருங்காயம் என்றுதான் நான் நினைத்து வந்தேன். அதுவே...